178) மகிழ்வினை விதைத்திட |
மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட உறவினராய் வருவோம் மன்னவன் யேசுவின் பொன் வழி நடந்திட அன்பினில் வாழ்ந்திடுவோம் - இறை ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய் பூமியில் ஒன்றுமில்லை - 2 இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால் பகைமையில் தொல்லையில்லை - 2 பிரிந்திடும் சுயநல வேர்களை அறுப்போம் புது வழி படைத்திடுவோம் -2 நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் (மகிழ்வினை) மனிதரின் உரிமைகள் மறுத்திடும் சமூகம் இறைவனின் குடும்பம் இல்லை - 2 எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால் இறைவனும் உயிர்ப்பதில்லை - 2 அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம் புது வழி படைத்திடுவோம் - 2 நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் (மகிழ்வினை) |