189) வருக வருகவே வசந்த மலர்களே |
வருக வருகவே வசந்த மலர்களே - 2 மலர்ந்திடவே மகிழ்ந்திடவே விரைந்து வாருங்கள் எழுக எழுகவே இறைவன் காணவே - 2 இனிமை ததும்ப இன்னிசையில் இசைந்து வாருங்கள் சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை மறந்து வாழுவோம் சுகம் நிறைந்து மலர்ந்த வாழ்வில் மகிழ்ந்து வாழுவோம் - 2 ஆனந்தம் காணவே அவரிலே கூடுவோம் இருகரங்கள் விரித்தவராய் அழைக்கும் இறைவன் குரலைத் தேடி - 2 உலகம் யாவும் இனி அவரின் ஆட்சியாக்குவோம் உண்மை விதைத்து உலகை அவரின் மாட்சியாக்குவோம் - 2 அமைதியின் தூதராய் அவரிலே வாழுவோம் ஆதவனாய் ஒளிவீசி அழைக்கும் இறைவன் குரலைத் தேடி - 2 |