14) அன்பின் திருக்குலமே |
அன்பின் திருக்குலமே - இறை யேசுவின் அரியணையே எழுவோம் ஒருமனதாய் - கூடித் தொழுவோம் புகழ் பலியாய் இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம் மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் இருளின் ஆட்சியை முறியடிக்க - அன்று நிகழ்ந்த பலியை நினைப்போம் இறைவன் மைந்தனே பலிப் பொருளாய் - தன்னை இழந்த தியாகம் உரைப்போம் சுயநலம் மறைய சமத்துவம் வளர அன்புப் பரிசு கொண்ட இறைகுலம் வளர்ப்போம் இறைவன் வார்த்தையை எடுத்துரைப்போம் - இந்த இனிய பலியில் இணைவோம் உறவு விருந்தினைப் பரிமாறும் - திரு விருந்துப் பகிர்வில் மகிழ்வோம் வலிமையில் வளர வாஞ்சையில் திகழ வள்ளல் யேசுவின் அழைப்பினை ஏற்போம் |