176) பூஜைக்கு மலராய் |
பூஜைக்கு மலராய் ஆகிட வந்தோம் புண்ணிய நதியில் குளித்திட வந்தோம் சங்கொலியாய் சங்கீதமாய் உள்ளம் மகிழ்ந்திட செண்பகமாய் செவ்வந்தியாய் வேள்வி மலர்ந்திட 2 அருளின் விருந்து உண்டு அன்பின் விருது கொண்டு அடிமை மகிழ்ந்திடவே 2 மலரைக் கொய்து வந்து மாண்பின் பீடம் வைத்து புதுமை அடைந்திடவே புனிதம் நிறைந்திடவே புவியலைகள் மணியலைகள் மாயை மறைந்திட கவிமணிகள் குயிலிசைகள் வாழ்வு நிறைந்திட 2 இதயவீணை கொண்டு மதுரகானம் தந்து உம்மை வணங்கிடவே 2 தெய்வவாசல் நின்று ஜோதி அமுது உண்டு தாகம் தணிந்திடவே தேவன் களித்திடவே |