Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  13) அற்புத அன்பனின் அடி  
அற்புத அன்பனின் அடி தொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே
இயேசுவை வணங்கிடுமே

ஆலய மணியின் ஓசையைக் கேட்டோம்
ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்டோம்
ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம்
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்2

ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவர் சந்நிதி வணங்கியே நின்றோம்
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம்
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்