Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  31) ஆலய பீடம் வாருங்கள்  



ஆலய பீடம் வாருங்கள் இறைமக்களே
ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே
மனத்தாங்கல்களோடு அல்ல
மனமாற்றங்களோடு செல்ல (2)
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்

வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே
வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம்
நிறைவாய் பெறுவதே அருளென்போம்
இருப்பதைப் பகிர்வதே சமமென்போம்
நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு - 2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு

இறைவார்த்தை நெறியே உண்மை வழி
இதயத்தைத் தேற்றும் இன்ப மொழி
தன்னையே தருகின்ற தலைவன் வழி
பகிர்வில் உயர்வு காணும் நெறி - இந்த
உண்மையை நாளும் உணர்ந்திடவே - 2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்