Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  63) இதோ இதோ ஒரு யாத்திரை  


இதோ இதோ ஒரு யாத்திரை - உம்
இரக்கம் வேண்டும் திரு யாத்திரை - 2

இதயத்தைத் தகர்த்திடும் இடர்ப்பாடிடையே
உம்மையே தேடும் யாத்திரை
உம்மையே நம்பும் யாத்திரை
ஓ இறைவா ஓ நல்லவரே
எம் கூக்குரல் கேட்டருளும்
ஓ இறைவா ஓ வல்லவரே
எம்மைக் காத்திட எழுந்தருளும் - 2

கடல் கடந்த எம் யாத்திரை - எம்
கைவிலங்கு தகரவே
உடலுயிர் மறந்து போராடும் யாம்
உன் துணையில் வெல்லவே - 2
ஓடுக்கப்பட்டோரின் உயிர்ப்பே எம்மை
உரிமை குலமாக்குமே - எம்மை
உரிமை குரலாக்குமே

இதயத்தினால் ஒரு யாத்திரை - உன்
இன்னுறவை அடையவே
கதியற்று வாழும் சோதரர்க்கு
கை கொடுத்து வாழவே - 2
பகையகற்று வாழும் அன்பின் உலகை
உரிமையாய்த் தாருமே - எமக்கு
உரிமையாய்த் தாருமே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்