49) இதயம் திறந்து இரக்கம் பொழிந்து |
இதயம் திறந்து இரக்கம் பொழிந்து இனிய தேவன் அழைக்கின்றார் அன்பில் மகிழ்ந்து அருளில் நிறைந்து இறைபலியினில் இணைவோம் வருவோம் (2) இறை இல்லம் வருவோம் பெறுவோம் (2) இறையாசீர் பெறுவோம் தந்தை இல்லம் தங்கி வாழ மந்தையாகக் கூடுவோம் இராகத்தோடும் தாளத்தோடும் கானம் ஒன்று பாடுவோம் பேறு பெற்ற மக்களாக நாமும் வாழவே அடைக்கலமாவோம் அவரில் மகிழ்வோம் பாவநோய்கள் நம்மில் நீங்க பரமன் தந்த பலியிது பங்கு கொள்ள பரிவு கொண்டு பாச தேவன் அழைக்கின்றார் பரிதவிக்கும் மாந்தர் உள்ளம் பகிர்வில் மலரவே அவரின் பதமே சரணடைவோமே |