Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   86) இறைவன் அழைக்கும்  




இறைவன் அழைக்கும் நல் பலியிதுவே
இனிதாய் கலந்திடுவோம்
புது உறவு மலர்ந்து புது வழியும் திறந்து - இறை
அருளில் நிறைய நம்மை அழைக்கின்றார் (2)
வருவோம் ஒன்றாய் - இணைவோம் அன்பாய்
இனிய பலியில் இன்று கலந்திடுவோம்

உன்னத பலியும் இதுவே (2)
உயர்ந்த பலியும் இதுவே (2)
புனித பலியும் இதுவே (2)
புண்ணிய பலியும் இதுவே - தேவ
நன்மைகள் நிறைந்த பலி
உண்மைகள் உணர்த்தும் பலி
வல்லமை வழங்கும் பலி
வருவோம் புகழ்வோம்

அன்பின் சமூகம் அமைப்போம் (2)
அருளில் நிறைந்து இணைவோம் (2)
அவரின் குரலைக் கேட்போம் (2) இறை
அழைப்பை ஏற்று வருவோம் - நிறை
வளங்கள் வழங்கும் பலி
வலிமை பெருகும் பலி
மனிதம் மகிழும் பலி
எழுவோம் தொழுவோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்