Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

    129) காலை இளங்கதிரே  
காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாழில் விழு

ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞானத் தவக்குலமே நீ அருள் தரும் பலியை இசை

திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்துகொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு - 2
பெரும் வரக்கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2
திருமறைத் தகனப்பபலி பீடத்தில் குழுமி விடு

வருங்குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலி பீடத்தில் தெய்வீக வாழ்வடைந்து
சிரமே தாள் பணிந்து சிந்தையை இறைக்களித்து - 2
பரமுதல் தருகின்ற அருட்பலி பங்கேற்பாய்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்