Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   156) பலி பீடம் வரும்  
பலி பீடம் வரும் குருவோ - புதுப்
பாடம் தரும் மொழியோ
நல் நாதம் தரும் இசையோ நாம்
வாழ்வு பெறும் பலியோ

சிறு குழந்தையை வர விடுங்கள் - பல
இன்னல்கள் நான் தீர்ப்பேன் - 2
உந்தன் ஆசைகள் நான் அறுப்பேன் - புது
உலகம் நான் சமைப்பேன்

செந்நீர் சிந்திய இடமிதுவே - சீர்
அருள் பெற்ற இடமிதுவே - 2
அதை நினைந்தே நாம் கூடிடுவோம் - புதுப்
பலியைப் படைத்திடுவோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்