186) வரங்கேட்டு வருகின்றேன் |
வரங்கேட்டு வருகின்றேன் இறைவா - என் குரல்கேட்டு அருளாயோ தலைவா (2) பகை சூழும் இதயத்தின் சுவரையெல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் (2) புகை சூழ்ந்து இருள் வாழும் மனத்தில் எல்லாம் - உன் பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன் நலமெல்லாம் எனக்கென்றும் தேடும் குணம் - இனி நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் (2) பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்டபின் (2)- என் பரிசாக உனைக்கேட்கும் வரம் கேட்கின்றேன் எளியோர் தம் விழிபேசும் துயரம் எல்லாம் - என் இதயத்தைப் பிளக்கட்டும் எனக்கேட்கிறேன் (2) ஓளியில்லா இல்லங்கள் இதயங்களில் (2)- நல் ஒளியேற்றும் விளக்காக உனைக்கேட்கிறேன் நம்பிக்கை இழந்தோர் தம்முகம் பார்த்தபின் -நன் நம்பிக்க பெறவேண்டும் எனக்கேட்கின்றேன் (2) அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின்-(2) - உன் அன்பெண்ணி வரவேண்டும் உனைக் கேட்கின்றேன் |