அணி அணியாய் ஆலயத்தில் Mp3 |
அணி அணியாய் ஆலயத்தில் பணிவுடனே நாம் செல்வோம்
(2) ஆண்டவராம் இயேசுவிலே திருப்பலி கொண்டாடுவோம் மனிதம் மலரச் செய்வோம் புனிதம் அடைய முயல்வோம். (2) பிளவுகளை வேரறுப்போம் ஒரே உள்ளமாய் வழிபடுவோம் அன்பைப் பகிர்வோம் பலியெனத் தருவோம் அறிவைக் காட்டுவோம் உறவை வளர்ப்போம் இறைசாட்சியை நனவாக்கவே இறைசாட்சியாய் வாழவே (2) உரிமைகளை மதித்திடுவோம் நீதி உண்மையைக் காத்திடுவோம் நற்செயல் புரிவோம் சாட்சியம் பகிர்வோம் இயேசுவை அறிவோம் அவரை அறிவிப்போம் - நிறை வாழ்வினை நமதாக்கவே இறை செய்தியாய் மாறவே |