Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   177) பொங்கும் கடலென  



பொங்கும் கடலென சங்கு முழங்கிட
கண்கள் மலர்ந்திட கூடுங்களே
சந்தம் முழங்கிட சிந்தை வணங்கிட
நெஞ்சம் நெகிழ்ந்திட பாடுங்களே
நெல் மணிக்கதிரென அருள் மகன் வேள்வியில்
கலந்திட கழிப்புடன் வாருங்களே
மனம் எனும் மாளிகை மணம் பெறும் ஏழிசை
வழிபடும் நாளிகை சுகந்தரும் மூலிகை
பேரின்பம் தரும் தெய்வம் நம் யேசுவே

குழந்தைகள் இளைஞர்கள் முதியவர் எண்ணங்கள்
கடவுளின் திருமுன் கலந்திடட்டும் ஆ.. ஆ.. ஆ..
காலங்கள் கடமைகள் முடிவுகள் எல்லாம்
கடவுளின் அரசைத் தழுவிடட்டும் ஆ.. ஆ. ஆ..
இறை யேசுவே - தினம் வாழவே
மண்ணில் அவரது மாட்சி மலரவே
வருக வருக வருக வருக

உடல்தனில் மனதினில் ஊனங்கள் எல்லாம்
உன்னதன் அருளால் நலன் பெறவே ஆ.. ஆ.. ஆ..
கொடுமைகள் பாவங்கள் முழுவதும் அறுந்திட
கல் மனம் கனிந்திட வழிபடவே ஆ.. ஆ.. ஆ..
பிறர் மகிழ்விலே சுகம் காணவே
பாடிப் புகழ்ந்திட தேவன் மகிழ்ந்திட
வருக வருக வருக வருக


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்