105) இந்தக் காலைப் பொழுதை |
இந்தக் காலைப் பொழுதை ஆசீர்வதியும் இயேசுவே இந்த நாள் முழுவதும் துணை தந்து வழிநடத்துமே என் வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைத் தாருமே தீமைகள் பாவங்கள் நோய்களின்றிக் காத்துக் கொள்ளுமே உம் வேதத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சத்தை ஆளணுமே நான் இன்று சந்திக்கும் மனிதர்களுக்கு உம் அன்பைச் சொல்லணுமே மாலை நேரம் மீண்டும் உம் பாதத்தில் அமரணுமே மகிழ்ந்து உம்மை நன்றியால் பாடிப் புகழணுமே |