22) அன்புத் திருச்சபை |
அன்புத் திருச்சபை திருக் கூட்டமே பரமன் புகழ் பாட வாருங்களே (2) எங்கும் புது வாழ்வு ஒளி வீசிட இறைவன் அழைப்பதைக் கேளுங்களே சிற்றோடைகள் பல கூடி ஆறாகிடும் சிறு சிறு குடும்பங்கள் பங்காகிடும் (2) உற்ற பல உறுப்புக்கள் உடலாகிடும் ஒற்றுமை பெறுவது பணிவாகிடும் (2) அடிமைகள் என்பவர் எவருமில்லா அரச குருத்துவ திருக் கூட்டமே (2) அவரவர் பொறுப்பினை நிறைவேற்றியே கர்த்தர் பணி ஆற்றும் திருக் கூட்டமே (2) |