200) வாருங்கள் இறைமக்களே |
வாருங்கள் இறைமக்களே வாழ்த்துங்கள் ஆண்டவரை மாட்சியில் மிளிரும் மன்னனிவர் ஆட்சியில் தேர்ந்திட வாருங்களே பலிப்பீடத்திலே ஒரு சங்கமம் அதில் காண்போமே பலன் ஆயிரம் உமது வார்த்தை வழியினிலே எமது வாழ்க்கை நடந்திடவே உமது நியமங்கள் நிஐமாக்க எமது உழைப்பைக் கொடுத்திடவே பலிப்பீடத்திலே ஒரு சங்கமம் அதில் காண்போமே பலன் ஆயிரம் உமது அருள் எம்மில் நிறைந்திடவே எமது பொருளைப் பகிர்ந்திடவே உமது மகிழ்ச்சி பரவிடவே எமது அயர்ச்சி விரட்டிடவே பலிப்பீடத்திலே ஒரு சங்கமம் அதில் காண்போமே பலன் ஆயிரம் உமது அன்பைப் பெற்று நாங்கள் பாவத்தின் மன்னிப்பை அடைந்திடவே உமது பாதையில் நடந்திடவே உம்மில் நாமும் வாழ்ந்திடவே பலிப்பீடத்திலே ஒரு சங்கமம் அதில் காண்போமே பலன் ஆயிரம் |