128) கல்வாரித் தென்றலே வா |
கல்வாரித் தென்றலே வா கனிவாகத் தேற்றிடவா கல்வாரித் தென்றலே வா தங்கும் பாவக் கனல்போக்க எங்கும் தேவ அருள்வீச பெரும் யோர்தான் ஆற்றினிலே திருமுழுக்கானீரே சிறுகல்வாரி மலைதன்னிலே திருப்பலி ஆனீரே திருமறையின் உயிரே வா அருட்கொடையின் தென்றலே வா செங்கடல் கடந்திட சீர்பாதை ஆனீரே பாவக்கடல் கடந்திட பலிப்பொருளானீரே செங்கடல் தென்றல் காற்றதுவே கல்வாரித் தென்றல் ஆனதுவே கடும் கோடை காலத்திலே கல்வாரி சென்றீரே கோடையினிலே வாடையாக குளிர்ந்திட வந்தீரே பாடி வரும் தென்றலே வா பாருலகின் ஜோதியே வா |