28) ஆண்டவரின் அருள் |
ஆண்டவரின் அருள் பிரசன்னம் அன்புடனே நம்மைக் காக்கும் பிரசன்னம் தேடிடும் மக்களைத் தேற்றிடும் இறைப்பிரசன்னம் இதுவே நம்மை மீட்கும் பிரசன்னம் இயேசு என்னும் திருப்பெயரை சொல்லும் போதிலே இன்பம் வந்து பாயுதம்மா நமது வாழ்விலே பிரசன்னம் - 3 இயேசு பிரசன்னம் - 2 விண்ணில் வாழும் இறைவன் நமது தந்தையாவதால் மண்ணில் நமது மனங்களிலே வாழ்ந்து வருவதால் (2) காண்பது காண்பது தேவன் இயேசு தெய்வப் பிரசன்னம் உரிமையிலே அப்பா தந்தாய் என்றழைப்பதால் அனைவருமே அவரின் அன்புப் பிள்ளையாகிறோம் - 2 புலரும் காலைப் பொழுதில் பொதிகைத் தென்றல் போலே இயேசு வாழ்வதாலே இனிமை இன்றே இனிமை இருவர் மூவராக நாமும் கூடி வருவதால் இதயம் திறந்து வாஞ்சையுடன் பாடி ஜெபிப்பதால் உணர்வது உணர்வது இயேசு தரும் இன்ப பிரசன்னம் ஜாதிபேத தடைகளை நாம் கடந்து செல்வதால் கிறிஸ்துவுக்குள் ஓரினமாய் உரிமை கொண்டதால் - 2 புதிய உதயம் காண்போம் புனித பயணம் செல்வோம் இயேசுவோடு நடந்தால் இல்லை பயமே இல்லை |