Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   123) என்னை அழைத்தார்  
என்னை அழைத்தார் இறைவன் - நம்
அன்பிற்கு ஓர் அருவியாக - நம்
ஆற்றலுக்கு ஓர் கருவியாக
என்னை அழைத்தார் இறைவன்

அன்பின்றி வாழ்ந்திடில் உலகு
பாலை நிலமாமே - இறைவன்
அன்பினில் வாழ்ந்திடில் என்றும்
சோலை வனமாமே - இந்த
அன்பு ஒன்றிற்கே சாட்சியாகவே
பேச வாழ நடக்க - என்னை..

தீமையின் ஆற்றல் ஓங்க
நன்மை தோற்றிடுமோ - நன்மை
ஓங்கிட வேண்டும் என்றே
நல்லார் ஏங்குகின்றார் - அந்தத்
தீமை மீதிலே வெற்றி கொள்ளவே
நன்மை நாளும் நிலைக்க - என்னை..


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்