Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  35) ஆலயம் இறை ஆலயம்  



ஆலயம் இறை ஆலயம்
அருமையான ஓவியம்
இறைவன் உறையும் காவியம் - 2
இணைவோம் அவரின் இல்லிடம்

ஆலயமணியே அவர் குரலாம்
அழைக்கும் இறைவன் தரும் ஒளியாம்
பீடமே அன்பின் பிரசன்னமாம் - 2
பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னமாம்

இறைவனின் வார்த்தையே மனுவாகும்
மறையுடல் யேசுவின் உடலாகும்
இறைமக்கள் இறைவனின் தரிசனம் - 2
தரிசனம் தரிசனம் தரிசனம்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்