வருகைப்பாடல்கள் | இறைவனின் ஆலயம் கூடிடுவோம் |
இறைவனின் ஆலயம் கூடிடுவோம் விடுதலை ராகங்கள் பாடிடுவோம் -2 பிரிவினை மறந்து பகைமையைக் களைந்து சரித்திரம் படைக்கச் செல்வோம் (புது) -2 ஆர்ப்பரிப்போம் அவர் சந்நிதியில் அகமகிழ்வோம் அவர் பிள்ளைகளாய் -2 1. தாயின் கருவில் காக்கும் இறைவன் தனது அன்பால் அழைக்கின்றார் உயிர்ப்பின் செய்தியை உலகிற்கு அளிக்க உவகையுடனே அழைக்கின்றார் அவரின் சாட்சியாய் உலகில் வாழ -2 ஒன்று கூடி சென்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் அவர் சந்நிதியில் அகமகிழ்வோம் அவர் பிள்ளைகளாய் -2 2. காட்டு மலர்களைக் காக்கும் இறைவன் தனது குழந்தையாய் அழைக்கின்றார் வானத்துப் பறவையை வாழ்விக்கும் இறைவன் வள்ளல் தந்தையாய் அழைக்கின்றார் அப்பா தந்தாய் என்றழைத்து -2 பரமன் பீடம் சென்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் அவர் சந்நிதியில் அகமகிழ்வோம் அவர் பிள்ளைகளாய் -2 |