Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   (புதுமை தேடுகின்ற இதயங்களே )  

புதுமை தேடுகின்ற இதயங்களே
புதுப்பலியினில் கலந்திட வாருங்களே - 2
புவியின் ஆண்டவர் இருக்கின்றார் - அவர்
புனித இதயங்களில் பிறக்கின்றார் 2
எழுக எழுக இறைகுலமே 2 இன்று
இறைவனின் ஆசி அடைந்திடவே 2

இடர்படும் இறைவனின் ஊழியரே - நம்
இறைவனின் பணியினை ஏற்றிடவே 2
இகமதில் இனிதே அழைக்கின்றார் 2
தலைவன் தங்கத் தலைவன்
யேசுவின் வழியினில் இந்த தரணியை நாளும்
வழி நடத்திடவே பணிக்கின்றார்

ஏழைகள் வாழ்வை உயர்த்திடவே - என்றும்
எளியோர்க்கு நற்செய்தி உரைத்திடவே 2
அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவே 2
உதயம் தேடும் இதயங்கள் எல்லாம்
உண்மை விடுதலை அடைந்திடும் நிலையை
உன் வழியே அவர் காண்கின்றார்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்