Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் இறைவா வந்தேன்  

இறைவா வந்தேன் உன்னில்லம் நானும்
என்னைத் தந்திடவே பலியாய் படைத்திடவே -2
உனதாய் ஏற்றிடுமே பலியில் இணைத்திடுமே -2

உன் அன்பை சொல்ல உன்னையே தந்தாய்
சிலுவை மரத்தினிலே -2
உன் அன்பு போல எதுவும் இல்லை
இந்த உலகினிலே -2
என் அன்பை சொல்ல என்னையே தருவேன்
உனக்கு காணிக்கையாகவே -2

உறவை வளர்க்கும் உன்னத இடமே
உன் திரு ஆலயமே -2
உன் இல்லம் போல எங்கும் இல்லை
எங்கள் ஊரினிலே -2
உன் அருள் பெறவே உன் பதம் பணிந்தேன்
உனக்கு காணிக்கையாகவே -2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்