Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   173) புனித நல்பலியினில்  



புனித நல்பலியினில் கலந்திடுவோம்
துணிவுடன் யேசுவின் வழிநடப்போம்
கூடிடுவோம் ஒன்றாய்க் கூடிடுவோம்
பகிர்ந்திடுவோம் என்றும் மகிழ்ந்திடுவோம்

உறவிலும் தொடர்பிலும் தூயவழி
தூய்மை அன்பு நமது மொழி
தரணிக்குத் தேவை நீதி வழி
இணைந்தே நடப்போம் நேயவழி

மனிதமும் மாண்பும் இணைந்திடவே
இதயம் உறவில் வளர்ந்திடவே
சாதியும் பேதமும் மறைந்திடவே
சாட்சியாய் வாழ்வோம் இயேசு வழி
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்