111) உமது அரசு வருக |
உமது அரசு வருக எங்கள் இதயமே மகிழ மக்கள் வாழ்வெல்லாம் மலர மனித மாண்பு உயர்ந்திட இறைவன் ஆட்சி துலங்கிட உமது அரசு வருக வருக மாந்தர் தம்மை வாட்டும் வறுமை ஒழிய வேண்டுமே மகிழ்வு தென்றல் எங்கும் என்றும் வீச வேண்டுமே ஏற்றத்தாழ்வு என்னும் நோயும் நீங்க வேண்டுமே ஏங்கித் தேடும் ஒருமைப்பாடு விடிய வேண்டுமே வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட பேதங்கள் எல்லாம் இல்லாமல் ஓடிட உலகமெல்லாம் ஒரே குடும்பம் ஆகிட ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும் - 2 யேசுவின் கனவெல்லாம் நனவாகட்டும் கடவுள் தாமே எல்லோருக்கும் தாயும் தந்தையாம் கவி உலகின் மாந்தரெல்லாம் உடன் பிறந்தவராம் படைப்பெல்லாம் எல்லோருக்கும் பொது உடமை தான் பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் பெரும் கடமை தான் நண்பர்கள் ஆயினும் அந்நியர் ஆயினும் துன்பங்கள் சேரினும் இன்பங்கள் கூடினும் அன்பில் வாழும் இறை சமூகம் ஆகணும் எங்கும் துன்பம் விலகட்டும் தங்கும் இன்பம் பரவட்டும் - 2 யேசுவின் கனவெல்லாம் நனவாகட்டும் |