108) உதயங்கள் தேடும் |
உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர மனங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க வாரும் இறைகுலமே (2) இரவினில் தவித்திட்ட வேளையிலே ஒரு நிலவாய் நிலமதில் நடந்தவனே இடர்களில் துடித்திட்ட பொழுதினிலே எந்தன் இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே பாவம் நம்மிலே மறையாதோ நின் பாதம் நம்மிலே பதியாதோ (2) சோகங்கள் மறைந்திட அருள் புரிவாய் கவலைகளால் மனம் கலங்கையிலே உன் கரங்களால் என்னைத் தாங்க வந்தாய் ஆறுதல் தேடி நான் அலைகையிலே உந்தன் விழிகளில் கருணை மழை பொழிந்தாய் புதிய உறவுகள் மலர்ந்திடவே உந்தன் அன்பின் பலியினில் கலந்திடவே (2) ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம் |