193) வருவீர் கிறிஸ்து |
வருவீர் கிறிஸ்து குருவே வருவீர் தரவீர் உமது அன்பின் பலியை வருவீர் கிறிஸ்து குருவே வருவீர் குருவுடன் சேர்ந்து அடியோர் நாங்கள் மீட்பின் பலியை இறைவனுக்களிக்க பலி நிறைவேற்றும் நித்திய குருவாய் குருவின் கையில் திருப்பலிப் பொருளாய் பலிப்பொருள்தனிலே நிறைந்த நல் அருளாய் அருள் உயிர் தரவே மீட்பரே வருவீர் சிலுவையின் மீது தொங்கியபோது இரத்தம் சிந்தியே பலி நிறை செய்தீர் சிலுவையின் பலியை இரத்தம் சிந்தாமல் பீடத்தில் செய்திட திருவுளம் கொண்டீர் |