வருகைப்பாடல்கள் | அன்பின் ஆட்சியை கொண்டு |
அன்பின் ஆட்சியை கொண்டு வந்த தெய்வமே அன்பரே நீர் வாருமே அசைந்தாடும் உம் அருட்கரத்தால் அமைதியை நீர் தாருமே அமைதியை நீர் தாருமே (4) உமது புதுமை நிலத்தில் மீண்டும் உதயமாக வேண்டும் மடிந்த மண்ணும் வலிமையாக வளங்கள் திரும்பத் தாரும் மாமருந்தே புதுவிருந்தே மாநிலமே அன்பில் வளர்ந்திடணும் அருட்கரமே துணைக்கரமே வலக்கரமாய் இங்கு எழுந்திடணும் விழுந்த மனிதம் எழுந்து நிதமும் உம்மைப் போற்ற வேண்டும் வகுப்பு வலையில் தவிக்கும் மனிதர் சிறிய நிலையைப் போக்கும் புதுவழியாய் புதுஒளியாய் ஆதவன் நீர் எழுந்து வரவேண்டும் (2) புது வாழ்வாய் புது வளமாய் ஆண்டவரே அன்பைத் தரவேண்டும் |