118) உன் இல்லம் என்னும் |
உன் இல்லம் என்னும் ஆலயத்தில் நுழைகையிலே இறைவா இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும் அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும் - எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம் தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம்-2 உன் வழியில் நடந்திடுவோம் உன் மொழியில் வாழ்ந்திடுவோம் பொங்கிடும் இன்பங்கள் சொந்தங்களாகிடும் - உந்தன் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை ஆனந்தத்தில் எந்தன் குரலோசை - 2 வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே - 2 பொங்கிடும் உன்னருள் இன்பங்களாகிடும் - உந்தன் |