Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   127) ஒன்று கூடுவோம்  
ஒன்று கூடுவோம் ஒன்றாய் பாடுவோம்
ஆண்டவன் இயேசுவின் பலியில் இணைவோம் (2)
நம் இறைவனைப் போற்றுவோம்
நம் இயேசுவைப் போற்றுவோம்
தூய ஆவியைப் போற்றுவோம்
திருப்பலியில் கலந்திடுவோம் (2)

இரக்கத்தைப்; பொழிந்து பாவத்தைப் போக்கும்
மன்னிப்பு வழிபாடு
இறைவனின் குரலை இதயத்தில் ஒலிக்கும்
இறைவாக்கு வழிபாடு
இயேசுவின் உடலைக் குருதியை உணவாய்
உட்கொள்ளும் வழிபாடு
வாழ்வில் ஆனந்தம் மலர்ந்திடச் செய்யும்
நன்றியின் வழிபாடு
நம் இறைவனைப் போற்றுவோம்
நம் இயேசுவைப் போற்றுவோம்
தூய ஆவியைப் போற்றுவோம்
திருப்பலியில் கலந்திடுவோம் (2)

ஆவியில் உண்மையில் இறைவனைத் தொழுவது
உயிருள்ள வழிபாடு
ஆண்டவர் இயேசுவை மீட்பராய் ஏற்பது
இறைவனின் வெளிப்பாடு
கடவுளைத் தொழுவதும் மனுக்குல சேவையும்
சமநிலைப் பண்பாடு
இயேசுவின் சீடராய்ச் சான்றுகள் பகர்வது
அழகிய நிலைப்பாடு
நம் இறைவனைப் போற்றுவோம்
நம் இயேசுவைப் போற்றுவோம்
தூய ஆவியைப் போற்றுவோம்
திருப்பலியில் கலந்திடுவோம் (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்