Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   114)உலகாளும் தேவா  
உலகாளும் தேவா உள்ளத்தின் தலைவா
உம்மையே வணங்கினோம்
உம்மருள் தாருமையா

நிலையான உம் அன்பு நினைவினில் வேண்டும்
நின் வரம் யாம் பெறவேண்டும்
நலமே எமக்கு நல்கிடும் இறைவா (2)
நல்மனம் தா நிறைவாய் - எமக்கு
நல்மனம் தா நிறைவாய்
நீரே முன் சென்றிடவே நிதமும் பின் தொடர்ந்திடவே
நல்ல வழியிலே மெல்ல நடக்கவே
நாங்கள் மகிழ்வோம் நடனமாடி

இயல்பான வாழ்வோ இடம் மாறும்போது
இனிமை தனிமையில் ஏது
உன் உறவு நீங்காது நிலைத்து
உயிர் காக்கும் மருந்தாகும் - எமக்கு
உயிர் காக்கும் மருந்தாகும்
நீரே முன் சென்றிடவே நிதமும் பின் தொடர்ந்திடவே
நல்ல வழியிலே மெல்ல நடக்கவே
நாங்கள் மகிழ்வோம் நடனமாடி

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்