33) ஆலய மணியொலி |
ஆலய மணியொலி ஒலித்தது ஆண்டவன் சந்நிதி இணைந்திடுவோம் புதுக்கனவுகள் புது உறவுகள் - இங்கு மலரட்டும் அருள் பொழியட்டும் உயர்வுகள் தாழ்வுகள் மறந்து - இன்று இணைவோம் விருந்தில் கலந்து குடும்ப உணர்வினில் ஒன்று கூடிப் பெற்ற வாழ்வினை எங்கும் கொடுப்போம் இது தன்னையே தந்திடும் தலைவன் பலி இனி நம்மையே ஈந்திட அழைக்கும் பலி 2 பழமைகள் எல்லாம் களைந்து - இன்று நுழைவோம் இறைவன் குலமாய் அன்பிலும் நட்பிலும் நாம் தொடர்ந்து இன்று அளிப்போம் தியாகப் பலியாய் இது தன்னையே தந்திடும் தலைவன் பலி இனி நம்மையே ஈந்திட அழைக்கும் பலி 2 |