Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம்  


ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் - இன்று
அவர் தரும் புனிதத்தைப் பெறுவோம்
அவரது சந்நிதி அமர்ந்திடுவோம் - 2
அமைதியின் வாழ்வினை உணர்ந்திடுவோம்

பொன்னான நாளிதுவே - நம்மை
பண்பாக்கும் நாளிதுவே
மீட்பராம் நம்மை இங்கு கூட்டி வந்தார்
மானிட வாழ்வினைத் தேடி தந்தார் இதை
உணர்ந்திடவே இறைப் பணிந்திடவே) மனம்
மகிழ்ந்திடவே நம்மை அழைத்தார்

இறைவனின் நாளிதுவே - நம்மை
ஈடேற்றும் நாளிதுவே
சுமைகளை அவரிடம் தந்திடுவோம்
சுகங்களை அவரிடம் கேட்டிடுவோம் இதை
அடைந்திடவே இறை சமூகத்திலே உளம்
மகிழ்ந்திடவே நம்மை அழைத்தாரே







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்