23) அன்பென்னும் கொடையால் |
அன்பென்னும் கொடையால் உம் பணிவாழ்வையே எங்கள் அகலாக ஏற்று அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம் இயேசுவே - 2 அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை அழியாஉறவில் இணைக்கும் பணியை நிறைவாய் வாழ்ந்த இறை மைந்தனே எங்கள் அருள் வாழ்வின் வழிகாட்டியே உம் பணிவாழ்வையே எங்கள் அகலாக ஏற்று அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம் சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர் வறியவர் வாழ்வுக்கு வழி வகுத்தீர் உலகின் இடர்களை வென்றிடவே - இறை சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில் புதிதாய் உலகை மாற்றினீரே - உம் பணிவாழ்வையே. தந்தையின் அன்பினைப் பகிர்ந்தவரே - இறை ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே ஆயிரமாயிரம் புதுமைகளால் - அன்று எளியவர் மனதை ஆட்கொண்டீர் வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய் எம்மிலே வாழ்ந்திடும் பரம்பொருளே - உம் பணிவாழ்வையே. |