Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

    204) விண்ணகத்தந்தையின்  



விண்ணகத்தந்தையின் பிள்ளைகளே
ஆண்டவர் யேசுவின் நண்பர்களே
உலகிற்கு ஒளியாய் வாழ்ந்திடவே
அன்பின் பலியினில் இணைந்திடுவோம் - 2
கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம்
ஆண்டவரின் நாளைப் போற்றிப் பாடுவோம்
பண்பாடுவோம் நல்ல பண்பாடுவோம்
படைத்திட்ட தேவனையே பாடிப்புகழ்வோம்
சரணம்
ஓ . . ஓ . .
இயேசுவின் வார்த்தைகள் கேட்டிடுவோம்
இதயத்தில் அதனை ஏற்றிடுவோம்
அன்பெனும் மழையால் பலன் கொடுப்போம்
அனைவர்க்கும் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம் - 2
இறைவனின் பிள்ளைகள் நாம் என்றே
இகமதில் அனைவர்க்கும் சாற்றிடுவோம்

ஓ . . ஓ . .
பாவத்தின் சுமைகளை இறக்கி வைப்போம்
பரிகாரம் புரிந்தே தூய்மையாவோம்
பிறரன்புப் பணியினில் மகிழ்ந்திடுவோம்
தூயநல் ஆவியின் கனி கொடுப்போம் - 2
உயிர் தரும் விண்ணக உணவினையே
விருந்தினில் உண்டு வாழ்வடைவோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்