Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் இறையாட்சியின் மனிதர்களே  
இறையாட்சியின் மனிதர்களே
மரிமைந்தனின் சீடர்களே
இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்
புது உலகொன்றைப் படைத்திட வாருங்கள்

நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா
இயேசுவே காட்டிய வழிஉண்டு
இயங்கிட நமக்கொரு நெறி உண்டு
எதிர் நோக்குடன் வாருங்கள்
கதிர் விளைந்திடும் காணுங்கள்

இந்தமானிட இதயங்களெல்லாம்
ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும்
நிறைவேறிட வேண்டாமா
மானிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன் பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்த பகையினும் வென்றிடுவோம்
                  கடவுளே நாங்கள் வருகின்றோம்
                  கவிநூறு உலகம் படைத்திடவே
                  கரம் கோர்த்தே சென்றிடுவோம்
                  கருத்துடன் செயல்படவே -2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்