வருகைப்பாடல்கள் | சந்தணம் பூசி வந்தனம் கூறி |
சந்தணம் பூசி வந்தனம் கூறி எந்தனைத் தொழ வந்தோம் சுந்தர மொழியில் ஸ்துதிகள் பாடி மன்னனைத் தொழ வந்தோம் ஆதியும் நீ அந்தமும் நீயே வேதமும் நீ வேந்தனும் நீயே நல்லவர் நீயே வல்லவர் நீயே உண்மையும் நீயே உயிரும் நீயே உலகின் ஒளியும் உண்மையின் ஊற்றும் வாழ்வின் வழியும் இயேசுவே கூடி வருவோம் தேவாலயம் கோடி பெறுவோம் பேரானந்தம் புதிய வானம் புதிய பூமி படைக்கச் செல்வோம் உயிர்கள் போற்றும் உண்மை தேவனே எங்கள் உள்ளம் வாருமே பணிந்து உன்னருள் யாம் வேண்டினோம் புரிந்து புதுநலம் தினம் காக்கவே வேதம் காக்கும் வழியில் நடந்து மனிதம் ஒன்றி போற்றுவோம் |