Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   7) அர்ப்பண ஜோதியாம்  
 

அர்ப்பண ஜோதியாம் இயேசுவே
அர்ப்பணமாக்குகிறேன்
எந்தன் உடல் பொருள் ஆவி
அனைத்தையும் உமக்கு
அர்ப்பணமாக்குகிறேன்

இறைவனின் திருச்சுதனே - உம்மை
ஆராதிக்கின்றேன்
பரிசுத்த ஜீவிதம் உமக்கேதான்
நான் இயேசுவுக்கே சொந்தம்

பாடுகள் சுமந்தவரே - உம்மை
ஆராதிக்கின்றேன்
பாடுகள் வழிதான் மகிமையே - என்
பாடுகள் உமக்கே சொந்தம்

உலகத்தின் இரட்சகரே - உம்மை
ஆராதிக்கின்றேன் - நீர்
அரசுரிமையோடு வரும் போது
என்னையும் நினைவு கூரும்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்