Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   161) புதிய பூமியே புது  
புதிய பூமியே புது பாட்டுப் பாடிவா
புனித நாளிலே இறைமாட்சி காணவா
வானிலே கோலமாய் வானதூதர் பாடவே
பூவிலே நாமுமே தேவன் பீடம் கூடுவோம்

விண்ணோரெல்லாம் கொண்டாடவே
இந்நாளையே பொன்னாளென
மண்ணோருமே கொண்டாடுவோம்
நம் பாடடும் விண்ணேறவே மறை
வாழ்வுதேடும் நாமெல்லோரும்
ஜீவ ஊற்று இயேசுபாதம்-நாடி
வாழ்வைத் தியாகமாக்குவோம் - வானிலே

சங்காகியே பண்பாடுவோம்
சங்கீதத்தால் ஒன்றாகுவோம்
எந்நாளுமே அன்பானவன்
பொன்தேகத்தில் பங்காகுவோம் - இறை
வாக்குக் கூறும் வாழ்வுதேடி
மானிடத்தின் ஜீவநாடி
நாதன் இயேசு பாதை செல்லுவோம் - வானிலே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்