Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   171) புலரும் புதுக்காலை  



புலரும் புதுக்காலைப் பொழுது நான்
புது ராகம் பாடிடுவேன்
புகழ்கீதம் இசைப்பேன் புனிதனே
என் நேசனே என் நேசனே

காணாமற் போன ஆடு நான் - என்னை
காப்பதற்குத் தேடும் ஆயன் நீ
கானக உலகில் அலையும் நான் - உன்னை
காண்பதற்குத் தவித்தேன் நாளும்
கர்த்தர் இயேசு நீ வந்தாய்
என்னைக் கண்டு மகிழ்வுற்றாய்
காட்டினாய் வழியை தந்தாய் ஒளியை

பாவியாய் போன பிறவி நான்
பார்ப்பதற்கு வருகின்ற மீட்பன் நீ
பாதகச் செயலில் வாழும் நான் - உன்னை
பார்ப்பதற்குத் தவித்தேன் நாளும்
பரமன் இயேசு நீ வந்தாய்
என்னைப் பார்த்து மன்னிப்பளித்தாய்
பகிர்ந்தாய் அன்பைக் கொடுத்தாய்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்