Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   152) பங்குத் திருச்சபை  
பங்குத் திருச்சபை திருக்கூட்டமே
பரமன் புகழ் பாட வாருங்களேன் - 2
எங்கும் புது வாழ்வு ஒளி வீசிட
இறைவன் அழைப்பதைக் கேளுங்களேன் - 2

சிற்றோடைகள் பல கூடி ஆறாகிடும்
சிறு சிறு குடும்பங்கள் பங்காகிடும் - 2
உற்ற பல உறுப்புகள் உடலாகிடும்
ஒற்றுமை பெறுவது பங்காகிடும் - 2

அடிமைகள் என்பவர் எவருமில்லர்
அரச குருத்துவ திருக்கூட்டமே - 2
அவரவர் பொறுப்பினை நிறைவேற்றியே
அன்புப் பணியாற்றும் திருக்கூட்டமே - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்