வருகைப்பாடல்கள் | இறைவனின் பிள்ளைகளே |
இறைவனின் பிள்ளைகளே இறை ஆலயம் வாருங்களே இறை பலியினில் இணைந்திடுவோம் இயேசுவின் நண்பர்களே அவர் மீட்பின் சாட்சிகளே திருப்பலியினில் கலந்திடுவோம் மங்கள ஆரத்தி எடுத்தும்மை அழைத்தோம் குருக்குலமே வருக திருப்பலி செலுத்திட உவந்தும்மை அழைத்தோம் திருக்குலமே வருக மங்கள ஆரத்தி எடுத்தும்மை அழைத்தோம் இறைமக்களே வருக திருப்பலி கண்டிட உவந்தும்மை அழைத்தோம் திருக்குலமே வருக ஆண்டவர் சந்நிதி அனுதினம் அடைந்தால் அகமெல்லாம் ஒளிர்ந்திடுமே அவர் அன்பினை அயலார் பணியினில் தொடர்ந்தால் இகமெல்லாம் இன்புருமே - 2 சங்கமித்தாலே சாட்சிகளாவோம் இறையாட்சியிலே விருட்சங்களாவோம் ஆண்டவர் மகிழ்திடுவார் அவர் அருள் மழை பொழிந்திடுவார் மண்ணக் மோட்சமாய் திருப்பலி திகழ்வது மாந்தரின் பாக்கியமே வானக வார்த்தையும் விருந்தையும் தருமது ஆத்தும் ஆனந்தமே - 2 ஒன்றிணைந்தாலே உயர்ந்திடுவோமே ஓர் குலமாக வளர்ந்திடுவோமே |