வருகைப்பாடல்கள் | வருவோம் வருவோம் |
வருவோம் வருவோம் ஆலயம் வணங்கியே ஆண்டவர் சந்நிதி பலியினில் கலந்து பகிர்தலில் வளர்ந்து பலனாய் பெறுவோம் நிம்மதி. நன்றி நன்றி என்று சொல்லி பாடுவோம் நாளும் இயேசு வழி செல்ல ஒன்றிணைவோம் குருவும் பீடமும் செம்மறியாய் கிறிஸ்து இயேசுவே திகழ்கின்றார் இது என் உடலும் இரத்தமும் என்று இன்றே விருந்தினை அளிக்கின்றார் நன்றி நன்றி என்று சொல்லி பாடுவோம் நாளும் இயேசு வழி செல்ல ஒன்றிணைவோம் கிறிஸ்துவ வாழ்வின் சிகரமாய் தேவ நற்கருணையை தருகின்றார் உலகினை உயிர்விக்கும் ஊற்றாய் நமக்கே உண்மை உணவினை கொடுக்கின்றார் நன்றி நன்றி என்று சொல்லி பாடுவோம் நாளும் இயேசு வழி செல்ல ஒன்றிணைவோம் |