Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் வண்ணத்தமிழ் பாட்டுப்பாடி  

வண்ணத்தமிழ் பாட்டுப்பாடி அழகு மலர் தூவித் தூவி
இறைவன் பாதம் பணிந்து வணங்கி புகழ்ந்தேத்துவோம் (2)
இறையருளில் வாழ்ந்து மனித மாண்பில் உயர்ந்து - 2
இறையரசை உலகில் பரப்பக் கூடிடுவோம் மகிழ்ந்திடுவோம்

அன்பின் உருவமே அருளாகும் செல்வமே
அழகின் தென்றலே சங்கீதமே (2)
மரியின் இயேசுவே என் வாழ்வின் ஜீவனே -2
நீதி தேவனே உண்மை வாழ்வின் சிகரமே
உம்மைப்போல எங்கள் வாழ்வை உயர்த்திடுவாயே -2
பலியாகிப் பணியாகி உம்மில் வாழ்ந்திடுவோம் -2
உறவாகி ஒளியாகி வாழ்வைக் காட்டிடுவோம் -2
நிறைவாகி நினதாகி உம்மில் சரணடைவோம் -2
ஒன்றாய்க் கலந்திடுவோம் உம்மில் கரைந்திடுவோம்

கருணைக் கடவுளே இரக்கத்தின் அமுதமே
இனிய நாதனே உயிர் நாதமே (2)
அம்மையே அப்பனே ஒப்பில்லா மகுடமே -2
முதலும் முடிவுமே எம்மை இயக்கும் தெய்வமே
கரங்கள் நீட்டி அரவணைத்துக் காத்தருள்வாயே -2 பலியாகி...



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்