106) இனிய கீதங்கள் இசைத்திடுவோம் |
இனிய கீதங்கள் இசைத்திடுவோம் புதிய கானங்கள் முழங்கிடுவோம் (2) இறைவன் வந்து தங்கும் - இல்லம் நமது நடுவில் அமைப்போம் (2) வருவோம் இணைந்து வருவோம் இணைவோம் அவரில் இணைவோம் (2) ஆனந்தமாக கூடிடுவோம் - நாம் அவரில் வாழ்ந்து மகிழ்வோம் இருவர் மூவர் இறைவன் பெயரால் கூடும் போது அவர் இருப்பார் தூய உள்ளம் கொண்டு வருவோம் தீயசெயலை வீழ்த்தி மகிழ்வோம் விண்ணும் மண்ணும் இணையும் பலியில் உறவுப் பாலம் அமைக்க எழுவோம் (2) மனித நேயம் வெல்லும் என்போம் உலகை அன்பால் நிறைப்போம் வருவோம் இணைந்து வருவோம் இணைவோம் அவரில் இணைவோம் (2) ஆனந்தமாக கூடிடுவோம் - நாம் அவரில் வாழ்ந்து மகிழ்வோம் பகையும் இருளும் விலகும் பலியில் பரமன் கருணை பொங்கி வழியும் சிலுவை மரத்தின் தியாக வாழ்வை தீப ஒளியாய் ஏற்றி ஒளிர்வோம் எங்கும் நிறையும் ஆவியாரின் கொடைகளாலே நிறைவு பெறுவோம் (2) ஏழை மனிதரில் இறையைக் காண்போம் அவரை மதித்துத் தொழுவோம் |