வருகைப்பாடல்கள் | இறைவன் யேசு வாழ்ந்து மலர்ந்த |
இறைவன் யேசு வாழ்ந்து மலர்ந்த இதய மலர்களே அவர் பலியில் சேர ஒன்றாய் கூடும் இறைவன் சமூகமே இறைவாழ்வு காணச் செல்வோம் நமது இல்லமே அவர் அன்பை என்றும் பெற்றுச் செல்வோம் நமது இல்லமே இறைவன் யேசு வாழ்ந்து மலர்ந்த இதய மலர்களே மனித நேயம் மண்ணில் மலரத் தம்மைத் தந்தாரே தம் சிலுவையினால் சாவை வென்று வெற்றி தந்தாரே ஏழை எளிய மக்களுக்காய் நாழும் வாழவே இறையேசுவோடு கையிணைந்து உலகை மாற்றவே புனித வாழ்வு புவியில் காண புதுமை செய்தாரே தம் அன்புறவால் மனதை மாற்றி அமைதி தந்தாரே நீதி உண்மை அன்பினுக்காய் நாளும் உழைக்கவே இறையேசுவோடு கையிணைந்து உலகை மாற்றவே |