வருகைப்பாடல்கள் | வாருங்கள் வாருங்கள் |
வாருங்கள் வாருங்கள் ஒன்றிணைவோம் வானகத் தந்தை அழைக்கின்றார் இறைமகன் இயேசுவின் கல்வாரிப்பலியில் ஒன்றாக இன்று கலந்திடுவோம் பிரிவுகள் பிளவுகள் களைந்திடவே அறிவுடன் ஒன்றாய் வாழ்ந்திடவே பரமன் இயேசுவின் பலியினிலே பண்போடு இணைந்து கலந்திடவே வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள் வாழ்வின் பலியினில் சேருங்கள் வார்த்தை வடிவில் வருகின்றார் வாழ்வுக்கு வழியும் தருகின்றார் மண்ணிலே விண்ணகம் அமைத்திடவே மாந்தர் நாம் ஒன்றாய் இணைந்திடுவோம் வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள் வாழ்வின் பலியினில் சேருங்கள் |