Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  54) இயேசுவில் இணைந்திட  


இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட
எழுந்திங்கு வாரீர் இறைமக்களே
அன்பினில் நனைந்திட அருளினில் வளர்ந்திட
நிறைவுடன் வாரீர் மானிடரே
எழுக, எழுக, இறைமக்களே வருக! வருக!! மானிடரே - 2

புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும்
பெறுவது வாழ்வின் கொடையன்றோ - அதை - 2
அடைய முயல்வதும் அமைதி காண்பதும்
அகிலம் வாழும் வழியன்றோ - 2
எழுக, எழுக, இறைமக்களே வருக! வருக!! மானிடரே - 2

உறவினில் வளர்ந்திட உண்மையில் நிலைத்திட
தன்னையே தந்தவர் இறைவனன்றோ - அவர் - 2
அரசினைக் காண ஒன்றாய் இணைவது
புதுயுகம் காணும் முறையன்றோ - 2
எழுக, எழுக, இறைமக்களே வருக! வருக!! மானிடரே 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்