70) இறைகுலமே வாருங்களே |
இறைகுலமே வாருங்களே பலியினில் கலந்திடவே குருக்குலமே வாருங்களே இறை அருளினைப் பகிர்ந்திடவே புனிதம் நிறைந்திட மனிதம் மலர்ந்திட நம் வாழ்வும் வளமாகிட (2) கடலில் நடந்தவர் நம் இயேசுவே காற்றை கடிந்தவர் நம் இயேசுவே கலங்கரை தீபமும் நம் இயேசுவே நம்மையும் அழைக்கின்றார் கல்வாரி பலியிது கருணையின் கொடையிது மீட்பினில் இணைந்திடுவோம் குருடர் பார்த்தனர் அவர் பெயரால் முடவர் நடந்தனர் அவர் செயலால் செவிடர் கேட்டனர் அவர் அருளால் நாமும் சுகம் பெறுவோம் கல்வாரி பலியிது கருணையின் கொடையிது மீட்பினில் இணைந்திடுவோம் |